×

அவரின் நிர்வாணம் ஆபாசமில்லை, அழகானது… சர்ச்சை நடிகருக்கு ஆதரவாகக் களமிறங்கிய நடிகை!

நடிகர் மிலிந்த் சோமனின் நிர்வாணப் படத்தைப் பற்றி பேசிய நடிகை பூஜா பேடி அதில் ஆபாசம் ஏதுமில்லை, அது ஒரு அழகியல் என்று தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தமிழில் கார்த்தியின் பையா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிலிந்த் சோமன் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மிலிந்த தான் கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்குத்
 

நடிகர் மிலிந்த் சோமனின் நிர்வாணப் படத்தைப் பற்றி பேசிய நடிகை பூஜா பேடி அதில் ஆபாசம் ஏதுமில்லை, அது ஒரு அழகியல் என்று தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தமிழில் கார்த்தியின் பையா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிலிந்த் சோமன் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மிலிந்த தான் கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து மிலிந்த் மீது ஆபாச வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கனவே கோவாவில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டேவை காவல் துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை பூஜா பேடி இந்த விவகாரத்தில் மிலிந்த் சோமனிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “மிலிந்த் சோமன் வெளியிட்ட அழகான புகைப்படத்தில் எந்த ஆபாசமும் இல்லை. மேலும் இதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வையாளரின் மனதில் தான் ஆபாசம் இருக்கிறது. அழகாக, பிரபலமாக இருப்பதும், தடைகளை உடைப்பது மட்டுமே நீங்கள் செய்யும் குற்றம். நிர்வாணம் ஒரு குற்றம் என்றால் அனைத்து நாக பாபாக்களும் கைது செய்யப்பட வேண்டும். இதை சாம்பல் மனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய போது வழக்கை விசாரித்த நீதிபதி “சில விஷயங்களை கலையாகப் பார்க்கும் போது அதில் சில விதிவிலக்கு உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைப்படங்களைத் தயாரிப்பது ஒரு கலை முயற்சியாகும், இல்லையெனில் கூட, அதை தீர்மானிப்பது சோதனைக்குரிய விஷயமாக இருக்கும். உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, எல்லா நிர்வாணமும் ஆபாசமானது என்ற முடிவுக்கு வர முடியாது, ”என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.