‘பூஜா ஹெக்டே’வுக்கு திருமணமா! –யார் மாப்பிள்ளை தெரியுமா?
Sep 26, 2023, 08:05 IST
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரருடன் திருமணம் என தகவல் பரவி வருகிறது.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில் பூஜா முன்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரை காதலிப்பதாகவும், அந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவர இருவரும் சம்மதித்துள்ளதாகவும் விரைவில் டும் டும் டும் என்றும் தகவல் வெளியாகி பரவி வருகிறது. ஆனால் அந்த மாப்பிள்ளை யார் என்பது மட்டும் சஸ்பென்சாக உள்ளது. இந்த தகவல் உணமையாக இருக்கும் பட்சத்தில் விரைவில் யார் அவர் என்பது தெரியவரும்.