இந்தியில் ரீமேக் ஆகும் வீரம்… சல்மான் கான் உடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே!
வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் உடன் இணைந்து நடிக்க மிகவும் ஆவலாக இருப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஐந்து அண்ணன் தம்பி பற்றிய கதைக்களம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து சிறுத்தை சிவா பவன் கல்யாண் நடிப்பில் வீரம் படத்தை ‘கட்டமறயுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
தற்போது வீரம் படம் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த ரீமேக் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகிவிட்டது. முதலில் இந்த ரீமேக்கில் அக்ஷய் குமார் தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதை அடுத்து சல்மான் கான் அந்தப் படத்தில் இணைந்தார்.
‘கபி ஈத் கபி தீவாளி’ என்ற பெயரில் இந்தியில் இப்படம் ரீமேக் அகிறது. நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
தற்போது அந்தப் படம் குறித்து பேசியுள்ள பூஜா ஹெக்டே சல்மான் கானுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி குறைந்தவுடன் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பூஜா ஹெக்டே சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து மீண்டார். இப்போது கோடைக்கால பரிசாகத் திரைத்துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு மாம்பழங்களை அனுப்பி வருகிறார் பூஜா.
இதற்கிடையில் பூஜா விஜய் உடன் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார்.