×

கல்யாணம் ஆகி 10 நாள் கூட ஆகல… கணவன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இந்த மாத தொடக்கத்தில் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்தார். இந்நிலையில் பூனம் பாண்டே தற்போது தனது கணவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கோவாவில் சாம் பாம்பே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெற்கு கோவாவின் கனகோனா கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு பூனம் பாண்டே தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கெடுத்து வருகிறார். அதையடுத்து திங்கள்கிழமை இரவு தனது கணவர்
 

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இந்த மாத தொடக்கத்தில் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்தார். இந்நிலையில் பூனம் பாண்டே தற்போது தனது கணவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கோவாவில் சாம் பாம்பே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தெற்கு கோவாவின் கனகோனா கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு பூனம் பாண்டே தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கெடுத்து வருகிறார். அதையடுத்து திங்கள்கிழமை இரவு தனது கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வெளிப்படுத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியதாகவும் பாண்டே புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, பூனம் பாண்டே, சாம் பாம்பே உடன் தனது திருமண புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். ஆனால் இப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தனது திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

போனவாரம் தான் இந்த ஜோடி ஹனிமூன் கொண்டாடியதாக கூறியிருந்தனர். மிகச் சிறந்த ஹனிமூன் கொண்டாடினோம் என்று பூனம் பாண்டே பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பாலியல் புகார் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.