×

கரீனா கபூருடன் இணையும் பிருத்விராஜ் !

 

கரீனா கபூர் நடிக்கும் இந்திப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பிருத்விராஜ்.மேக்னா குல்சர் இயக்கவுள்ள புதிய படத்தில் கரீனா கபூர் நடிக்கவுள்ளார். இதில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், யாருடைய தேதிகளும் ஒத்துப் போகவில்லை. இறுதியாக பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிருத்விராஜோ கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. கரீனா கபூர் - பிருத்விராஜ் நடிக்கும் படத்துக்கு ‘டாய்ரா (Daayra)’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
மேக்னா குல்சரின் முந்தைய படங்கள் போலவே, இதுவும் உண்மைக் கதையை தழுவியே எடுக்கவுள்ளார். ‘தல்வார்’, ‘ராஷி’, ‘சப்பாக்’ என மேக்னா குல்சரின் முந்தைய படங்கள் அனைத்துமே உண்மை சம்பவங்களை தழுவி படமாக்கப்பட்டவையே. அனைத்துமே பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.