×

'மாட்டிறைச்சி சாப்பிட்டேன், குறிவைத்து மூலைக்கு தள்ளப்பட்டேன்' - பாலிவுட்டில் இருந்து வெளியேறிய பிரியங்கா சோப்ரா !

 

பாலிவிட்டில் தவிர்க்க முடியாத நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது பாலிவுட்டில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் பதிவு செய்யத்தவறவில்லை.

மிஸ் வேல்ட்பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தனது திரைப்பயணத்தை 2002ஆம் ஆண்டு கோலிவுட்டின்தமிழன்படம் மூலம் தொடங்கினார்.அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் ‘The Hero: Love Story of a Spy’ என்ற படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்ளில் நடித்து முன்னணி நடிகை  அந்தஸ்தை கைப்பற்றினார். பாலிவுட்டை கடந்து ஹாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி நடைப்போட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிலையில் பிரியங்கா தான் ஏன் பாலிவுட்டில் இருந்து விலகினேன் என்பது குறித்து சமீபத்திய ஆங்கில ஊடக பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் பாலிவுட் சினிமாவில் இருந்து திட்டமிட்டு குறிவைத்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகளும் படிப்படியாக குறைய தொடங்கின. நான் சில  மக்களுடன் மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறேன். நான் அவ்வளவு சிறப்பாக அந்த விளையாட்டை விளையாட முடியவில்லை, அந்த அரசியல் எனக்கு ஒத்துவராது, இப்போது எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதுமட்டுமல்லாமல்  ஹாலிவுட்டில் இருந்து இசை உலகிற்காக எனக்கு  வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்"என பதிலளித்துள்ளார்.