பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகும் புதிய படம்... உற்சாகத்தில் சினிமா ரசிகர்கள்!
நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் மூவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகைகளான பிரியங்கா சோப்ரா கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் மூவரும் இணைந்து பார்ஹான் அக்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்திற்கு ஜீ லீ ஜாரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் மூவர் இணைந்துள்ளதுஇந்திய சினிமா ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மூன்று பெண்கள் உலகத்தை சுற்றி வரும் ஒரு டிராவல் படமாக இந்த படம் உருவாக இருக்கிறதாம். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
பார்ஹான் அக்தர் இயக்கத்தில் இதுபோன்று தில் சத்தா ஹை திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் ஆமீர் கான், சைப் அலி கான், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் பெண்களை வைத்து அதுபோன்ற படத்தை பார்ஹான் இயக்குவதால் இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.