ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிக்கும் ராமாயணா படத்தின் அப்டேட்
Oct 15, 2026, 07:00 IST
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிக்கும் படம், ‘ராமாயணா’. இதன் முதல் பாகம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. 2வது பாகம் அடுத்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இப்படத்துக்காக மும்பை பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸில் பிரமமாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக அரங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது.