×

இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம்... ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ரன்பிர் கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா!?

 

ராமாயணம் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இருவரும் பெரிய தொகையை சம்பளமாக பெறுவதாக் கூறப்படுகிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தின் புதிய பதிப்பு திரைப்படமாக உருவாக உள்ளது.இந்தத் திட்டத்தை மது மந்தேனா தயாரிக்கிறார். இந்தப் படம் மூன்று பாகங்களாக 750 கோடி என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் ரன்பிர் கபூர் இருவரும் நடிக்கின்றனர். ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும், ரன்பீர் கபூர் ராமராகவும் நடிக்கின்றனர் .

தற்போதைய தகவலின்படி, இருவருக்கும் இந்தப் படத்திற்காக 75 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மீதி தொகை படத்திற்கான தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சீதையாக நடிக்க போகும் நடிகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.