×

நடிகை ராணி முகர்ஜி பேச்சால் எழுந்த சர்ச்சை! 

 

நடிகை ராணி முகர்ஜியின் பேச்சால் பாலிவுட்டில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பாலிவுட் திரையுலகில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இப்போது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

விசித்திரமாக, நான் ஒரு நடிகையாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால் நான் நினைக்கும் முன்னரே என் கனவை என் அம்மா நனவாக்கிவிட்டார். அவர் தான் என் முதல் படத்தில் நான் நடிக்க வற்புறுத்தியவர். ஆனால் வழக்கமான அர்த்தத்தில் நான் கதாநாயகி வகைக்கு பொருந்துவேன் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் எனக்கு கதாநாயகிக்கான அம்சம் எதுவும் இல்லை. நான் உயரம் மிகவும் குறைவு, என் குரல் கதாநாயகிக்கு ஏற்றதாக இல்லை. நான் ஸ்ரீதேவி, ஜூஹி, மாதுரி மற்றும் ரேகா ஜி போன்ற திரை ஆளுமைகளைப் பார்த்து வளர்ந்தேன், அவர்களுடன் என்னை நான் கற்பனை செய்ததில்லை.

முஜ்சே தோஸ்தி கரோகே என்ற படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கலாம் 8 மாதங்கள் சும்மா இருந்தேன். என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் செய்தார்கள். அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள். யஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார்.

ராணி முகர்ஜி தெரிவித்துள்ள இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.