×

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் இணையும் கமல்? ரசிகர்கள் உற்சாகம்

 

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இந்த மூவர் காம்போவில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம் தயாராகவுள்ளதாம்.

ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ மூலம் பாலிவுட் சென்றார் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் அட்லீ. ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்தது. அட்லீ அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனை இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் சம்பள பிரச்னை காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை அட்லீ இயக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்தப் படம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ஒன் லைனை கேட்ட சல்மான் கான் நடிக்க சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் கமல்ஹாசன் நடிக்கலாம் என்று தகவல் சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்த திரைப்படம் அட்லீ பாணியில் ஆக்‌ஷன், காதல் கலவையான ஒரு சிறந்த மாஸ் என்டர்டெய்னராக இருக்கும் அதேநேரம், சூப்பர் ஸ்டார்களுக்கு ஏற்ற கதைக்களமாக இருக்குமாம்.

 
ரசிகர்கள் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும் ஒரு சினிமாவாக அட்லீயின் இந்த புதிய படம் அமையும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஜனவரி 2025-ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அக்டோபரில் அதற்கான ப்ரீ-புரொடக்ஷன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் சல்மான் கான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்கிறார்கள்.