ஆர்யன் கான் கைதானதை அடுத்து ஷாருக் கானை நேரில் சந்தித்துள்ள சல்மான் கான்!
ஷாருக்கானின் மகன் கைதான பிறகு நடிகர் சல்மான் கான் ஷாருக் கானின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
காடலியா குருசேஸ் நிறுவனத்தின் 'எம்பிரஸ்'என்ற உல்லாசக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொண்டு பயணிகள் பார்ட்டி நடத்துவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அந்தக் கப்பலில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா மற்றும் பேஷன் துறையை சேர்ந்தவர்களாக இருந்தது தெரிய வந்ததையடுத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகனும் இருந்துள்ளார்.
பின்னர் ஆரியன் கான் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் உள்ளிட்ட 13 பேரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்ததால் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அனைத்து தரப்பினரும் கவனமும் இந்த விவகாரத்தின் மீது தான் உள்ளது.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் ஷாருக் கானை சந்தித்துள்ளார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவாதித்துள்ளனர். ஆரியனின் கைது குறித்து சல்மான் கான் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பெயினில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை வந்துள்ள சல்மான் கான் ஷாருக் கானை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.