×

சல்மான் கான் நடித்த 'சிக்கந்தர்' பட  டீசர் வெளியானது
 
 

 

சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் சமீபத்தில் பேபி ஜான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.