×

"59 வயதாகியும் நான் தனிமையில் இருக்கிறேன்" -பாலிவுட் நடிகர் சல்மான்கான் வேதனை 

 
நடிகர் சல்மான்கான் 59 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. பல 100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அவர் சமீபத்தில் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலானது 
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிகர் மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்  ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சல்மான் கான் டிசம்பர் 27, 1965 இல் பிறந்தார்.இவருக்கு இப்போது 59 வயது ஆகிறது 
இவர்  திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் செய்தார்.
1988 ஆம் ஆண்டு "பீவி ஹோ தோ ஐசி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். "மைனே பியார் கியா" என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக பிரபலமானார்.
 பின்னர் "தபாங்" , "பஜ்ரங்கி பாய்ஜான்"  போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 தேசிய  விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
 மேலும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். 
இந்நிலையில் சல்மான்கான் 'தி கிரேட் இந்தியன்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான் தனக்கு இருந்த விவாகரத்து பயம் திருமணத்திற்கு ஒரு தடையாக இருப்பதாக பேசினார். இதனால் 59 வயதிலும் தனிமையில் இருக்க முடிவு செய்தது பற்றியும் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.