×

மீண்டும் பேமிலி மேன் சீரிஸ் இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கும் சமந்தா!

 

சமந்தா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரிஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 

ராஜ் மற்றும் டீகே ஆகியோரது இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் இந்தியாவின் அதிக வரவேரற்பு பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக மாறியது. இரண்டாம் பாகத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் களமிறங்கினார். ராஜி என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். மிகவும் தைரியமான கதாபாத்திரம் அது. அதில் நடிக்க பல நடிகைகள் தயங்குவர். ஆனால் திருமணம் ஆன பின்பும் கூட சமந்தா துணிச்சலாக நடித்திருந்தார். 

தற்போது சமந்தா பான் இந்தியா படம் ஒன்றில் நடித்து வருகிறார். பின்னர் உலகம் முழுவதும் வெளியாகக் கூடிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். 

இந்நிலையில் சமந்தா மீண்டும் பேமிலி மேன் சீரிஸ் இயக்குனர்களாக ராஜ் மற்றும் டீகே இணையுடன் கூட்டணி அமைக்கிறார். சிட்டாடல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களின் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் இந்த சீரிஸைத் தயாரிக்கின்றனர். 

இதற்கிடையில் டாப்ஸி தயாரிப்பில் சமந்தா புதிய பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.