×

போதைப்பொருள் வழக்கு… ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கானிடம் மன்னிப்பு கோரிய சமந்தா!

போதைப்பொருள் விவகாரத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்காக தற்போது சமந்தா மன்னிப்பு கோரியுள்ளார். நடிகர் சுஷாந்தின் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கு விசாரணையின் போது சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பரும் முன்னாள் மேலாளருமான ரோகிணி ஐயர் மற்றும் ‘தில் பெச்சாரா’ இயக்குனர் முகேஷ் சாப்ரா ஆகியோரின் பெயர்களை ரியா கூறியதாக செய்திகள் வெளியாகின. மேலும், போதைப்பொருள்
 

போதைப்பொருள் விவகாரத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்காக தற்போது சமந்தா மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் சுஷாந்தின் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கு விசாரணையின் போது சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பரும் முன்னாள் மேலாளருமான ரோகிணி ஐயர் மற்றும் ‘தில் பெச்சாரா’ இயக்குனர் முகேஷ் சாப்ரா ஆகியோரின் பெயர்களை ரியா கூறியதாக செய்திகள் வெளியாகின.

மேலும், போதைப்பொருள் பயன்படுத்திய  15 பிரபலங்களின் பெயர்களை ரியா வெளிப்படுத்தியதாகவும், பாலிவுட் நட்சத்திரங்களில் 80 சதவீதம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 25 பாலிவுட் பிரபலங்களை விரைவில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விசாரணைக்கு வரவழைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ரகுல் மற்றும் சாரா பெயரை ரியா கூறவில்லை என்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியைப் பகிந்து சமந்தா #SorryRakul என்ற ஹாஷ்டேக் மூலம் மன்னிப்பு கோரியிருந்தார். தற்போது #SorryRakul என்ற ஹாஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.