×

 8 டிகிரி செல்சியல் குளிரில் பயிற்சி எடுக்கும் சமந்தா... பதறிய ரசிகர்கள் கேள்வி ? 

 

நடிகை சமந்தா குளிரில் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு ஆண்டுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற வெப் தொடர் தி ஃபேமிலி மேன். இந்த வெப் தொடரில் நடிகை சமந்தா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே ஆகிய இருவரும் இணைந்து இயக்கியிருந்தார். இந்த வெப் தொடரின் வெற்றிக்கு பிறகு ராஜ் மற்றும் டிகே கூட்டணியில் புதிதாக உருவாகி வரும் வெப் தொடர் ‘சிடாடல்’. 

இந்த வெப் தொடரில் சமந்தா மற்றும் வருண் தவான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா, மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 

இந்த வெப் தொடருக்காக நைனிடால் என்ற இடத்திற்கு சமந்தா மற்றும் படக்குழுவினர் சென்றிருக்கின்றனர். அங்கு 8 டிகிரி செல்சியஸ் குளிரில் நடிகை சமந்தா கடுமையான குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு இதெல்லாம் தேவையா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.