×

ரன்பிர் கபூரை ரொமான்ஸ் செய்ய விரும்பும் சமந்தா!

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் உடன் திரையில் ரொமான்ஸ் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா தற்போது தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் மூலம் ஓடிடி-யில் என்ட்ரி கொடுத்துள்ளார் சமந்தா. இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதிகளாகச் சித்தரித்தாக தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிஸை
 

நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் உடன் திரையில் ரொமான்ஸ் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தற்போது தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் மூலம் ஓடிடி-யில் என்ட்ரி கொடுத்துள்ளார் சமந்தா.

இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதிகளாகச் சித்தரித்தாக தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் சமந்தா, சீரிஸின் ப்ரோமோஷனுக்காக பல நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமந்தா சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் ​​மனோஜ் பாஜ்பாயைத் தவிர, திரையில் நீங்கள் ரொமான்ஸ் செய்ய விரும்பும் மற்றொரு நடிகர் யார் என்ற கேள்விக்கு, உடனடியாக ரன்வீர் கபூர் பெயரைக் கூறினார்.

அடுத்து மனோஜ் பாஜ்பாய் இல்லையென்றால், இந்த சீரிஸில் அவரது கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்திருக்கலாம் என்ற கேள்விக்கு, தன்னுடைய மாமனார் நாகார்ஜுனாவின் பெயரை உடனடியாகச் சொன்னார்.

பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் மூலம் சமந்தா இந்தியில் அறிமுகமாகிறார். இதையடுத்து இந்தியில் பல படங்களில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.