×

அட ஆதிராவா இது… சஞ்சய் தத் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் சஞ்சய் தத்தின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். பாலிவுட் திரைத்துறையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்தால் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. கொரோனா பரிசோதனையின் போது
 

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் சஞ்சய் தத்தின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

பாலிவுட் திரைத்துறையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்தால் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது.

கொரோனா பரிசோதனையின் போது ஆக்சிமீட்டரில் சோதனை செய்த போது அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து அவர் மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அதில் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மும்பையில் தன்னுடைய முதல்கட்ட சிகிச்சையை பெற்றார். அதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது.

தற்போது கீமோ தெரபி சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் தத்தின் சமீபத்திய புகைப்படம் வெளியானது. அதில் மிகவும் மெலிந்து ஒல்லியாக இருக்கிறார் சஞ்சய் தத். மருத்துவத்துறையை சேர்ந்த ஒரு ரசிகை, நடிகர் சஞ்சய் தத்துடன் எடுத்துள்ள அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர். சஞ்சய் தத் கேஜிஎப் 2 படத்தில் நடித்து வந்தார். தற்போது அவர் அந்தப் படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.