அட்லீ இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் ஷாருக் கான்!?
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் புதிய படத்தில் ஷாருக் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்திற்கு ‘சங்கி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த செய்தி உறுதியாகினால் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். ஓம்சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பற்றிய சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ஷாருக்கான் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி, குற்றவாளி என இரு வேடங்களில் நடிக்க உள்ளாராம். அட்லீ கடைசியாக இயக்கிய மெர்சல் மற்றும் பிகில் படங்களில் இரட்டை வேடங்கள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷாருக் கான் ஏற்கனவே பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படம் நிறைவு பெற்றவுடன் அட்லீ படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.