×

பழைய பார்முக்குத் திரும்பும் ஷாருக் கான்... தொடர்ந்து 3 படங்களில் பங்கேற்பு!

 

பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் திரையில் தோன்றி 3 வருடங்களுக்கு மேல் ஆகப் போகிறது. அவரது படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படம் தோல்வி அடைந்ததால் அவர் இவ்வளவு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளார்.

அதையடுத்துட் சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்கத் துவங்கினார். அதையடுத்து அட்லி இயக்கத்திலும் இணைந்தார். அப்போது ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

எனவே ஷாருக் கான் நடித்து வந்த இரு படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. மூன்று வாரங்களுக்கு மேலாக ஆர்யன் கான் சிறையில் இருந்தார். அப்போது ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பம் முழுவதும் மிகுந்த வேதனையிலும் அவரது மகனை எப்படி வெளியே கொண்டு வரலாம் என்றும்  பரபரப்பாக இருந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தான் ஆர்யன் முழுவதுமாக விடுதலையானார். எனவே ஷாருக் கான் மீண்டும் படங்களில் நடிப்பது பற்றி யோசிக்க துவங்கியுள்ளார். ஷாருக்கான் மீண்டும் ஜிம் சென்று உடலை பிட் ஆக மாற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் முதலாக அவர் பதான் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பின்னர் அட்லீயின் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது