பழனி படிக்கட்டு போல உடலமைப்பு... எயிட் பேக்ஸ் உடன் வெறித்தனம் செய்யும் ஷாருக் கான்!
ஷாருக் கான் தற்போது சிக்ஸ் பேக்கில் செம மாஸாக இருக்கும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.
பாலிவுட்டின் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக் கான். உலக அளவில் அனைத்து தரப்பிலும் அறியப்படும் நபராக இருந்து வருகிறார். ஷாருக் கான் திரையில் தோன்றி கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகப் போகிறது. அவரது படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் தவம் இருக்கின்றனர். ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படம் தோல்வி அடைந்ததால் அவர் இவ்வளவு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளார்.
அதையடுத்துட் சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்கத் துவங்கினார். அதையடுத்து அட்லி இயக்கத்திலும் இணைந்தார். இதற்கிடையில் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பம் முழுவதும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். தற்போது ஷாருக் அதிலிருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அட்லீ படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.
ஷாருக்கானின் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது ஷாருக் கான் தற்போது அசத்தலான உடலமைப்புடன் எய்ட் பேக்ஸ் வைத்து வெறித்தனம் செய்யும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.