×

தள்ளிப்போகும் ஷாருக்கானின் ‘ஜவான்’... காரணம் என்ன தெரியுமா ?

 

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் திட்டமிட்டபடி படத்தின் பணிகள் நிறைவு பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.