ஷாருக்கான் பிறந்தநாளில் வெளியான ‘டன்கி’ பட டீசர்!
இன்று ஷாருக்கான் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவர் நடித்துள்ள ‘டன்கி’ படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஜவான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள படம் டன்கி. இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.