×

தள்ளிப்போகிறதா ஷாருக்கானின் ‘ஜவான்’ ?... ஏமாற்றத்தில் ரசிகர்கள் !

 

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழின் சூப்பர் இயக்குனரான அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, நயன்தாரா ஆகிய இருவரும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழியாகவுள்ளது. வரும் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கடந்த மாதமே முடிக்க திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவுபெறவில்லை. தற்போது இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் இறுதிக்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவுபெறும் என கூறப்படுகிறது. அதன்பிறகு தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. 

படப்பிடிப்பு பணிகள் திட்டமிட்டப்படி நிறைவுபெறாததால் படத்தை அறிவித்த தேதியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தின் ரிலீசை தள்ளி வைக்க அட்லி முடிவு செய்துள்ளாராம். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.