×

'கொரோனா மருத்துவமனையாக மாறும்' ஷாருக்கானின் பிரம்மாண்ட ஆபீஸ் …!

இந்தியாவில் கடந்த 5மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் பேரழிவில் சிக்கியது போன்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . இதை தொடர்ந்து பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு திரைத்துறை நட்சத்திரங்கள் பல உதவிகளை முடியாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க நபர் பாலிவுட் நடிகர் ‘சோனு சூட்’. இவர் செய்த உதவிகள் இன்று இவரை ‘இந்தியாவின் சூப்பர் ஹீரோ’ என்ற நிலைக்கே கொண்டு சென்றுள்ளன.இந்நிலையில் பாலிவுட்
 

இந்தியாவில் கடந்த 5மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் பேரழிவில் சிக்கியது போன்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . இதை தொடர்ந்து பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு திரைத்துறை நட்சத்திரங்கள் பல உதவிகளை முடியாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க நபர் பாலிவுட் நடிகர் ‘சோனு சூட்’. இவர் செய்த உதவிகள் இன்று இவரை ‘இந்தியாவின் சூப்பர் ஹீரோ’ என்ற நிலைக்கே கொண்டு சென்றுள்ளன.இந்நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் செய்துள்ள விஷயமும் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

மும்பையில் அமைத்திருக்கும் அவரின் ஆபீஸ் கட்டிடத்தை , கொரோனா வைரஸ் தொற்றடைந்த நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளார். இதையடுத்து பிரபல மருத்துவமனையின் உதவியுடன், அங்கு தேவையான மருத்துவ வசதிகளை தன்னுடைய சொந்த செலவில் செய்து கொடுத்திருக்கிறார். ஷாருக்கான் செய்த இந்த உதவி, இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்த கொரோனா வாரியர்க்கு நாமும் ஒரு ‘சல்யூட். போடலாமே.