பிரபல தமிழ் இயக்குனரின் பாலிவுட் படம் ரிலீஸ் எப்போது ? அறிவிப்பு வெளியானது…
பிரபல இயக்குனர் விஷ்ணு வரதனின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் நடிகர் அஜீத்தை வைத்து பில்லா படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கான இந்த படம் தற்காலத்திற்கு ஏற்றாற்போல் உருவாகி சூப்பர் ஹிட் பெற்றது. இவர் தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம், யட்சகன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
தொடர்ந்து தமிழில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த விஷ்ணுவர்தன், பாலிவுட்டில் முதல் முறையாக படம் ஒன்றை இயக்கியுள்ளார். ‘சேர்ஷா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடித்துள்ளார். க்யாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். கார்கில் போரில் வீரமரணமடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் சண்டிகர் காஷ்மீர், லடாக் மற்றும் பலம்பூர் பகுதிகளில் நடைபெற்று வந்தது. கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் ஜூலை 3ம் தேதி ‘சேர்ஷா’ படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.