×

அச்சு அசலாக பேய் மாதிரி மேக்கப் போட்டு வந்து ஷாக் கொடுத்த ஷில்பா ஷெட்டி!

 

தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்கள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பல யுக்திகளைக் கையாண்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.  நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் போட்டியாளர்கள் மட்டுமே இதுவரை இந்த மாதிரி பல க்திகளைக் கையாண்டு வந்தனர். தற்போது ரியாலிட்டி ஷோக்களின் நடுவர்களும் விதவிதமான கெட்டப்கள் போடுவது உள்ளிட்ட பல முயற்சிகளைக் கையில் எடுத்துள்ளனர். 

சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி முழுவதுமாக பேய் போன்று உடையணிந்து மேக்கப் போட்டு செட்டிற்கு வந்துள்ளார். அந்த மேக்கப்பில் அவரைப் பார்க்கும் போது உண்மையாகவே பயன்படுமாறு தான் உள்ளது. அதைப் பார்த்து சிலர் பயந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஷில்பா ஷெட்டி சூப்பர் டான்சர் பார்ட் 4 நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். 

எனவே அதன் ப்ரோமோஷனுக்காக பேய் வேடமிட்டது மட்டுமில்லாமல் பேய் போன்று உடையும் அணிந்து வந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.