×

என் குழந்தைக்கு நல்ல பெயர் செலக்ட் பண்ணி கொடுங்க… ரசிகர்களுக்கு பிரபல பாடகி அன்பு வேண்டுகோள்….

தனக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயரை செலக்ட் பண்ணி கொடுங்கள் என பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் கேட்டுக்கொண்டுள்ளார். 15 வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். இனிமையான குரல் வளம், திறமையான ராகம் என பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.பிரபல பாடகியாக சினிமாவில் வலம் வரும் ஸ்ரேயா, இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களில்
 

தனக்கு பிறக்கவுள்ள குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயரை செலக்ட் பண்ணி கொடுங்கள் என பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் கேட்டுக்கொண்டுள்ளார்.

15 வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். இனிமையான குரல் வளம், திறமையான‌ ராகம் என பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.பிரபல பாடகியாக சினிமாவில் வலம் வரும் ஸ்ரேயா, இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி வருகிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களில் பாடல்கள் பாடி வருகிறார் ஸ்ரேயா கோஷல். இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இவர்,கடந்த 2015ம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சமீபத்தில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ள ஸ்ரேயா கோஷல், நானும்,என் கணவரும் குழந்தைக்கு பெயரிடுவது பற்றி இதுவரை யோசிக்கவில்லை. ஆனால் தற்போது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் இது குறித்து கேட்டு வருகிறோம்.அதுமட்டுமல்லாமல் ரசிகர்களாகிய உங்களிடமும் கேட்க விரும்புகிறேன்.நீங்கள்தான் தனித்துவமான, அர்த்தமுள்ள பெயர்களை செலக்ட் செய்து தருவீர்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.