×

தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த சோனு சூட் ! காரணம் கேட்டா ஆடிபோவிங்க !

பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து மக்களிடையே
 

பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து மக்களிடையே நிஜ ஹீரோ ஆனார். இதனால் இவருக்கு லட்சகணக்காக இருந்த ரசிகர்கள் கோடிக்கணக்கான மாறினர்.

சமீபத்தில் கூட ஹைதராபாத்தில் உள்ள ஒரு உயர்கல்வி நிறுவனம், அவர்களின் கலை மற்றும் மனிதநேயத் துறைக்கு சோனு சூட்டின் பெயரை வைத்து அவருக்கு பெருமை சேர்த்தது.

இந்நிலையில் வறுமையால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக சோனு சூட் தனது சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,

கொரோனா பரவளின் போது, எந்நாட்டு மக்களுக்கு உதவ வேண்டியது என்னுடைய கடமை என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு இந்தியனாக நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன். என்னுடைய கடைசி மூச்சு வரை இதை நிறுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார். சோனு சூட்டின் இந்த உதவி செய்யும் மனப்பான்மை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நடிகர் சோனு சூட், சிறந்த 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.