விறுவிறுப்பாகும் ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்... செம அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் !
இந்தியில் உருவாகும் ‘சூரரைப்போற்று’ ரீமேக் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான இந்த படம், சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவானது. பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து முக்கிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தின் முதல் பாடல் தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.