×

விமானத்தில் சோனு சூட் புகைப்படம்… கௌரவப்படுத்திய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்…

நடிகர் சோனு சூட்டை பெருமைப்படுத்து விதத்தில் பிரம்மாண்ட போஸ்டரை விமானத்தில் ஒட்டி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சிறப்பித்துள்ளது . அருந்ததி, ஒஸ்தி, தபாங், குங்ஃபூ யோகா என பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் சோனு சூட். சினிமாவில் இவரின் வில்லன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுபோல் நிஜ வாழ்வில் ரியால் ஹீரோவாக செயல்பட்டு வருகிறார். கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. அப்போது ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். பேருந்து, ரயில் திடீரென
 

நடிகர் சோனு சூட்டை பெருமைப்படுத்து விதத்தில் பிரம்மாண்ட போஸ்டரை விமானத்தில் ஒட்டி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சிறப்பித்துள்ளது .

அருந்ததி, ஒஸ்தி, தபாங், குங்ஃபூ யோகா என பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் சோனு சூட். சினிமாவில் இவரின் வில்லன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுபோல் நிஜ வாழ்வில் ரியால் ஹீரோவாக செயல்பட்டு வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. அப்போது ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். பேருந்து, ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் மாநிலம் விட்டு மாநிலம் பிழைக்க போனவர்கள் செய்வதறியாது தவித்து வந்தனர். புலம்பெயர் தொழிலாளர்களாக தவித்த இவர்களை தனது சொந்த செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் அழைத்து வந்தவர் சோனு சூட்.

இதோடு வெளிநாடுகளில் சிக்கிய மாணவ, மாணவிகளைக் கூட ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் உதவியுடன் திரும்ப அழைத்து வந்தார். இதுபோன்ற எண்ணற்ற உதவிகளை செய்த சோனு சூட்டை பெருமைப்படுத்து விதத்தில் பிரம்மாண்ட போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். இதை 737 விமானம் ஒன்றில் செய்து சோனு சூட்டை கவுரவப்படுத்தியுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள சோனு சூட், “இது எனக்கு மிகப் பெரிய பெருமை. ஊரடங்கு நேரத்தில் பல்வேறு இடங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு கொண்டு வந்து ஸ்பைஸ் ஜெட் உதவி புரிந்தததற்கு நன்றி. “மோகா டூ மும்பை முன்பதிவில்லாத டிக்கெட்டில் வந்தது ஞாபகம் இருக்கிறது….” என நடிகர் சோனு சூட் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.