×

ஒரே படத்தில் இத்தனை ஸ்டார் நடிகர்களா? ஷாருக் - ராஜ்குமார் ஹிரானி இணையும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்!

 

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய நடிகர்கள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.  

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

இதற்கிடையில், ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி கூட்டணி அமைக்கிறார். ராஜ்குமார் ஹிரானி அமீர் கான் நடிப்பில் வெளியான 'பீகே' படத்தைப் போல சமூக நகைச்சுவை படம் எடுக்கத் திட்டமிட்டு வருகிறாராம். 

தற்போது இந்தப் படத்தின் முக்கிய நடிகர்கள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறாராம். மேலும் கஜோல் ராஜ் குமார் ராவ், மனோஜ் பாஜ்பாயி, வித்யா பாலன், போமன் இரானி என ஸ்டார் நடிகர்களின் சங்கமமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். 

படத்தின் கதை இறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஷாருக் கான் நடிப்பில் கடந்த 2018-ல் 'ஜீரோ' திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவின் இருந்து விலகி இருந்த ஷாருக் கான் தற்போது மீண்டும் சினிமாவின் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். இதற்கிடையில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.