×

கொரோனா நிதிக்கு 50 கோடி கொடுத்து உதவும் ஸ்டார் இந்தியா மற்றும் வால்ட் டிஸ்னி!

வால்ட் டிஸ்னி மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்கள் இணைந்து கொரோனா நிவாரண நிதிகளுக்காக இந்திய அரசிற்காக 50 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகமாகி வருகிறது. எனவே இத்தைகைய இக்கட்டான சூழலில் இந்தியாவைக் காப்பாற்ற பலரும் முன்வந்து நிதி உதவி அளித்து வருகின்றனர். தற்போது ஸ்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவின் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க 50
 

வால்ட் டிஸ்னி மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்கள் இணைந்து கொரோனா நிவாரண நிதிகளுக்காக இந்திய அரசிற்காக 50 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளன.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகமாகி வருகிறது. எனவே இத்தைகைய இக்கட்டான சூழலில் இந்தியாவைக் காப்பாற்ற பலரும் முன்வந்து நிதி உதவி அளித்து வருகின்றனர்.

தற்போது ஸ்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவின் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க 50 கோடி நிதி அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“கொரோனாவுக்கு எதிரான நம் போராட்டத்தில் நாங்கள் இந்தியா உடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் ஸ்டார் இந்தியா இணைந்து இந்தியாவின் கொரோனா நிவாரண முயற்சிகளுக்கு உதவ இந்தியா 50 கோடி ரூபாயை தாழ்மையுடன் பங்களிக்கிறோம்.

உயிரைக் காப்பாற்ற முக்கியமான சுகாதாரப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதே காலத்தின் தேவை. இது நம் அனைவருடைய போராட்டம் மற்றும் எங்கள் பங்களிப்பு இந்தியாவுக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும் கடந்த வருடம் கொரோனா நிவாரணத்திற்காக 28 கோடி ரூபாய் கொடுத்து பங்களித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளனர் .