×

சுஷாந்த் சிங்கின் பாதம் திருகப்பட்டிருந்தது: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்..

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை கூறிய போதிலும், அவர் மரணம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா மீது புகாரளித்துள்ளார்.. பீஹார் அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.. மேலும் நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர்
 

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார்  என காவல்துறை கூறிய போதிலும், அவர் மரணம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.

சுஷாந்த்தின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா மீது புகாரளித்துள்ளார்.. பீஹார் அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.. மேலும் நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளது..
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று பாஜக மாநிலங்களவை எம்.பி : சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்து அர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்..

இதுதொடர்பாக  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், ‘சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த ஆர்.சி.கூப்பர் நகராட்சி மருத்துவமனையின் ஐந்து மருத்துவர்களை, சிபிஐ விசாரணை செய்வது பயன்தருவதாக இருக்கும். சுஷாந்த் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஊழியரின் கூற்றுப்படி, சுஷாந்தின் கணுக்காலுக்கு கீழுள்ள பாதம் முறிந்ததைப் போன்று திருகப்பட்டிருந்தது என்று தெரிகிறது. உண்மைகள் வெளிவருகிறது!!’ என்று தெரிவித்துள்ளார்.