×

பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் சூப்பர் ஹிட் தென்னிந்தியப் படங்களின் பட்டியல்!

 

தற்போது தென்னிந்தியாவில் உருவாகும் படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் தெலுங்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பல திரைப்படங்கள்  பல முன்னணி பாலிவுட் நடிகர்களின் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளன. அப்படி இந்தியில் ரீமேக் ஆக இருக்கும் படங்களின் பட்டியலை தான் பார்க்க போகிறோம்.

மலையாளத்தில் மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிஜு மேனன் மற்றும் பிரித்வி ராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம்  மாபெரும் வெற்றி பெற்றத் . தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜான் ஆபிரகாம் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்தப் படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தியாவின் மிகச் சிறந்த சைக்கோ திரில்லர் படங்களில் அப்படத்திற்கு சிறப்பான இடம் உண்டு. தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ராட்சசன் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்த திரைப்படம் ஹிந்தியில் ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படமும் இந்தியில் 'மும்பைகர்' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜெர்சி திரைப்படம் இந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது. 

தெலுங்கில் அல்லாரி நரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான நாந்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அந்தப் படம் தற்போது அஜய் தேவ்கன் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கோலமாவு கோகிலா, மாஸ்டர் த்ரிஷ்யம் 2,ஜிகர்தண்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல படங்களும் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது