×

இந்தியில் வேறு பெயரில் வெளியாகும் ‘சூரரைப்போற்று’… ரிலீஸ் எப்போது தெரியுமா ?

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம் இந்தியில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிய இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வசூலை குவித்தது. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான
 

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம் இந்தியில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிய இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வசூலை குவித்தது. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது. கொரோனா காரணமாக திரையங்குள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியானது. இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இப்படம் பட்ஜெட் விமானங்கள் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.

பல மொழிகளில் ரீமேக் செய்ய இயக்குனர் ஆர்வம் காட்டி வரும் இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்தியில் இந்த படத்திற்கு ‘உடான்’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 4-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தமிழை போன்று இந்தியில் பெரிய ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.