×

ரியாவுக்கு ஆதரவாகப் பேசி சுஷாந்த் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான வித்யா பாலன்!

ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக வித்யா பாலன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதில் பல திருப்பங்கள் நிகழ்கின்றன. சுஷாந்தின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த வழக்கில் நீதி கோருகின்றனர். பாலிவுட்டில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான்இந்த வழக்கில் முக்கியக்
 

ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக வித்யா பாலன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதில் பல திருப்பங்கள் நிகழ்கின்றன. சுஷாந்தின் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த வழக்கில் நீதி கோருகின்றனர்.  பாலிவுட்டில் சிலர் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான்இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி என்று கூறுகின்றனர். பல ஊடகங்களும் இதே கருத்தை முன் வைக்கின்றனர்.

சமீபத்தில் நடிகை டாப்ஸி மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் ரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வித்யா பாலனும் ரியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.  “இதை உரக்கச் சொன்னதற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் லட்சுமி மஞ்சு. அன்பான இளம் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் துயர மற்றும் அகால மரணம் ஊடகங்களுக்கு வேடிக்கை விளையாட்டாக  மாறியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதே மூச்சில், ஒரு பெண்ணாக, ரியா சக்ரவர்த்தியின் இழிவுபடுத்தப்படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. இது ‘குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்று கருதப்படவில்லையா, அல்லது இப்போது ‘நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி’! ஒரு குடிமகனின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு ஓரளவு மரியாதை காட்டுவோம், சட்டம் அதன் போக்கில் செல்லட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வித்யா பாலனின் இந்தப் பதிவு சுஷாந்த் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் Justice for sushant singh rajput என்ற க்ரூப் ஒன்று உள்ளது. இதில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் வித்யா பாலனை சாடிப் பேசியுள்ளனர்.
நீங்கள் இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவீர்கள் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகமான ஆதரவு இந்திய மக்களிடமிருந்து கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கண்களைத் திறந்து உண்மை மற்றும் நீதிக்காக மட்டும் ஆதரவு தெரிவியுங்கள்.” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
“புறக்கணிப்பு பட்டியலில் அவரது பெயரையும் சேர்க்கவும். சமூக மேடையில் ரியா குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கட்டும். அவர்கள் நயவஞ்சகர்கள் ..” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.