×

இணையத்தை கலக்கும் தமன்னாவின் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’... டிரெய்லர் வெளியீடு !

 

 தமன்னா - விஜய் வர்மா இணைந்து நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இந்தியில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’. இந்த ஆந்தாலஜி படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகமான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ உருவாகியுள்ளது.

‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ஆந்தாலஜி படத்தில் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 4 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கொனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். 

நெட் பிளிக்ஸ் ஓடிடித் தளத்தில் இந்த ஆந்தாலஜி படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த டிரெய்லரில் தமன்னாவின் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.