×

நடிகர் சோனு சூட்டிற்கு கோவில் கட்டிய தெலுங்கானா மக்கள் !

சினிமா படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஒருவரை மக்கள் நிஜ ஹீரோவாகவே பார்க்கும் ஒரு நபர் என்றால் அது பாலிவுட் நடிகர் சோனு சூட் தான். தான் மக்களுக்கு உதவி செய்வதை பப்லிசிட்டி செய்து அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் நடிகர் சோனு சூட் ,கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு
 

சினிமா படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஒருவரை மக்கள் நிஜ ஹீரோவாகவே பார்க்கும் ஒரு நபர் என்றால் அது பாலிவுட் நடிகர் சோனு சூட் தான்.

தான் மக்களுக்கு உதவி செய்வதை பப்லிசிட்டி செய்து அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் நடிகர் சோனு சூட் ,கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அனைதைத்தும் செய்திருக்கிறார்.

சமீபத்தில் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த தகவல் வெளியாகி மெய்சிலிற்கவைத்தது.

மத்திய, மாநில அரசுகள் கூட சோனு சூட்டிற்கு பலவகையில் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மக்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, சோனுசூட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவில் கட்டியுள்ளனர். நடிகைகள் பலருக்கும் ரசிகர்கள் கோவில் கட்டியதுப் போக புண்ணிய காரியம் செய்த நிஜ ஹீரோவுக்கு மக்கள் கோவில் கட்டியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.