×

ஜெயிலர் படம் போல ஹிந்தியிலும் ஒரு பாட்டுக்கு ஆடும் தமன்னா -ரசிகர்கள் மகிழ்ச்சி .

 
நடிகை தமன்னா தமிழில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார் .அது போல ஹிந்தியிலும் அவர் ஆடுகிறார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
தமன்னாவை ஆபாசமாக வர்ணித்ததாக இந்தி நடிகரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தமன்னா தற்போது, இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதில் பிசியாக இருக்கிறார் . ‘ஸ்த்ரி 2’, ‘ரெய்ட் 2’ படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தமன்னாவை ரசிகர்கள் பலரும் மில்க் பியூட்டி என அன்பாக அழைப்பார்கள். அதை தமன்னாவும் ஏற்றுக்கொண்டு, இந்த அன்புக்கு ஈடில்லை என்றெல்லாம் ரசிகர்களுக்கு நன்றி சொல்வார். ஆனால் பாலிவுட் நடிகர் அன்னு கபூர், தமன்னாவின் உடலை வர்ணிக்கும் விதமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘‘ஸ்த்ரி 2 படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு தமன்னா ஆடியிருப்பதை பார்த்து நான் சொக்கிப்போனேன். என்ன ஒரு கட்டழகு. அவருக்கு பால் உடல் (மில்க் பாடி). அதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்’’ என கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘‘அன்னு கபூருக்கு 69 வயதாகிறது. உங்கள் மகள் வயதுடையவர் தமன்னா. அவரை இப்படி ஆபாசமாக வர்ணிக்கலாமா?’’ என்று பலரும் அன்னு கபூரை கடிந்து விமர்சித்து வருகிறார்கள். இது பற்றி கருத்து கூறாமல் தமன்னா அமைதி காத்து வருகிறார்.