பாலிவுட்டின் 'கான்'கள் இணையும் புதிய படம்... ஷாருக் கான் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக சல்மான் கான் தகவல்!
நண்பர் ஷாருக் கான் உடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளைக் கொண்டாட பண்ணை வீட்டிற்கு சென்ற போது அவரை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சல்மான், பாம்பு தன்னை 3 முறை கடித்ததாகத் தெரிவித்தார். தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நெருங்கிய நண்பர் ஷாருக் கான் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் சினிமாவில் இருந்து நீண்ட ஓய்வில் இருக்கிறார். அவர் கடைசி படம் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ‘ஜீரோ’ படத்தின் தோல்வியால் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார் ஷாருக் கான்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ என்ற ஆக்ஷன் படத்தில் ஷாருக் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஷ்யாவில் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சி இடம் பெற உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் ஷாருக் கான், ரஷ்ய மாஃபியா கும்பலுடன் எதிர்த்து சண்டையிடுவார் என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு ஷாருக் கான் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் போது சல்மான் தான் வந்து காப்பாற்றப் போகிறாராம்.
இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.