கத்ரினா கைப் உடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… படப்பிடிப்பு திடீர் ரத்து!
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் பாலிவுட் படத்தின் ஷூட்டிங் கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் இந்தப் படம் துவங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
தற்போது கொரோனா அதிகரித்து பல படங்களின் படிப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விஜய் சேதுபதி, கத்ரினா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரிடமும் ஒரே நேரத்தில் கால்ஷீட் வாங்கி ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைகார் படத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷாஹித் கபூர் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.