'அட்லீ' தயாரிப்பில் இந்தியில் ரீமேக்காகும் ‘தெறி’- அடுத்தடுத்து வெளியான மாஸ் தகவல்.
இயக்குநர் அட்லீ- நடிகர் விஜய் ,முதல் முறையாக கூட்டணி அமைத்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘தெறி’. படத்தின் பாடல்கள்,காமெடி என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 7ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தை நடிகர் அட்லீ தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான A for APPLE தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்க உள்ளாராம். அவர் தயாரிக்கும் முதல் பாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ இதற்கு முன்னர் தமிழில், சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
அந்த படத்தில் கதாநாயகனாக வருண் தவானும் ‘கீ’ எனும்படத்தை இயக்கிய காலீஸ் இயக்குனராக இணைந்துள்ளார்களாம். படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சந்தா, எமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்டோர் நடித்த கதாபாத்திரங்களில் யார், யார் நடிப்பார்கள் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.