×

அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக இணைந்த பிரபல நடிகர்!

அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக்கியதை அடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் நாகசைதன்யா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்தில் முதலில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுமாகும் முதல் படமாகவும் அது கருதப்பட்டது. அமீர் கானே விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க பரிந்துரை செய்தாராம். பின்னர் அந்தப் படத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் விஜய் சேதுபதி
 

அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக்கியதை அடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் நாகசைதன்யா இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்தில் முதலில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுமாகும் முதல் படமாகவும் அது கருதப்பட்டது. அமீர் கானே விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க பரிந்துரை செய்தாராம். பின்னர் அந்தப் படத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகினார்.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கவிருந்த அந்தக் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் மே மாதம் முதல் அவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைகிறாராம்.

ஹாலிவுட்டில் 1994-ம் ஆண்டு வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் ரீமேக் தான் லால் சிங்க் சத்தா. இந்தப் படத்தில் கரீனா கபூர் கான் கதாநாயகியாக நடிக்கிறார்.