×

கல்யாணத்திற்கு ‘நோ’ சொன்ன நடிகைக்கு கத்திக்குத்து!

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை மால்வி மல்ஹோத்ரா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கத்தி குத்துக்கு ஆளாகியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் நடிகை மால்வியை தயாரிப்பாளர் என்ற பொய்யாகக் கூறி சில முறை சந்தித்துள்ளார். அதன்பிறகு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து மால்வியை வற்புறுத்தி வந்துள்ளார். பின்னர் திருமணத்திற்கு மறுத்து தெரிவிக்கவே யோகேஸ்வரி மால்வியை மூன்று முறை கத்தியால் குத்தியுள்ளார். அதையடுத்து மால்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்கள் தேசிய ஆணையத்தின் தலைவர் ரேகா
 

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை மால்வி மல்ஹோத்ரா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கத்தி குத்துக்கு ஆளாகியுள்ளார்.


குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் நடிகை மால்வியை தயாரிப்பாளர் என்ற பொய்யாகக் கூறி சில முறை சந்தித்துள்ளார். அதன்பிறகு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து மால்வியை வற்புறுத்தி வந்துள்ளார். பின்னர் திருமணத்திற்கு மறுத்து தெரிவிக்கவே யோகேஸ்வரி மால்வியை மூன்று முறை கத்தியால் குத்தியுள்ளார். அதையடுத்து மால்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் தேசிய ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்க ஆதரவு தருமாறு நடிகை கங்கனா ரனாவத் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். மும்பையில் எனக்கு இந்த மாதிரி சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை. இந்த மாதிரி சம்பவம் நடக்கும் என்று என் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. எனவே எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராட எனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று மால்வி தெரிவித்துள்ளார்.

குற்றம் சாற்றப்பட்ட யோகேஷ் மீது மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்ட்டுள்ளார்.