×

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராட யுனிசெப் உடன் இணைந்த ஆயுஷ்மான் குரானா!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவை யுனிசெப் இந்தியா குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராட ஒரு நட்சத்திர வழக்கறிஞராக நியமித்துள்ளது. #ForEveryChild என்ற இயக்கத்தை ஆயுஷ்மான் ஊக்குவிப்பார். ஒருபோதும் பாதுகாப்பான குழந்தைப் பருவத்தை அனுபவிக்காத எல்லா குழந்தைகளையும் பற்றியும் தான் கவலைப்படுவதாக ஆயுஷ்மான் தெரிவித்துள்ளார். “ஒரு நட்சத்திர வழக்கறிஞராக யுனிசெஃப் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லோரும் வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தைப் பெற தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். நம் குழந்தைகள் நமது வீட்டில் பாதுகாப்பாகவும்
 

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவை யுனிசெப் இந்தியா குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராட ஒரு நட்சத்திர வழக்கறிஞராக நியமித்துள்ளது. #ForEveryChild என்ற இயக்கத்தை ஆயுஷ்மான் ஊக்குவிப்பார். ஒருபோதும் பாதுகாப்பான குழந்தைப் பருவத்தை  அனுபவிக்காத எல்லா குழந்தைகளையும் பற்றியும் தான் கவலைப்படுவதாக ஆயுஷ்மான் தெரிவித்துள்ளார்.

“ஒரு நட்சத்திர வழக்கறிஞராக யுனிசெஃப் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லோரும் வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தைப் பெற தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். நம் குழந்தைகள் நமது வீட்டில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடுவதைப் பார்க்கும்போது, ​​இவை ஒருபோதும் கிடைக்காத குழந்தகள் வெளியில் வன்முறையில் வளருவதை எண்ணி கவலை கொள்கிறேன்” என்று ஆயுஷ்மான் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராட ஒரு நட்சத்திர வழக்கறிஞராக ஆயுஷ்மானை வரவேற்ற இந்தியாவின் யுனிசெப் பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹக் “ஆயுஷ்மான் குர்ரானாவை யுனிசெப் நட்சத்திர வழக்கறிஞராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் வகிக்கும் ஒவ்வொரு பொறுப்பையும் திறம்பட செய்பவர். மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் உணர்திறன், ஆர்வம் மற்றும் சக்திவாய்ந்த எதிர்காலத்தைக்  கொண்டு வர ஆயுஷ்மான் எங்களுடன் இணைகிறார்” என்று தெரிவித்துள்ளார்.