×

ஜூலை 31ம் தேதி வெளியாகிறது வித்யா பாலனின் ’சகுந்தலா தேவி’ திரைப்படம்..

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 3 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதே சமயம் கடந்த மார்ச் மாதம் முதல் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த பல திரைப்படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பல தயாரிப்பாளர்கள் பொருளாதார பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த சூழலில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்ஃபிலிக்ஸ் போன்ற டிஜிட்டல் ஓடிடி தளங்கள் புதிய படங்களை வாங்கி, அவற்றை நேரடியாக வெளியிட்டு வருகின்றன.
 

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 3 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதே சமயம் கடந்த மார்ச் மாதம் முதல் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த பல திரைப்படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பல தயாரிப்பாளர்கள்  பொருளாதார பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்ஃபிலிக்ஸ் போன்ற டிஜிட்டல் ஓடிடி தளங்கள் புதிய படங்களை வாங்கி, அவற்றை நேரடியாக வெளியிட்டு வருகின்றன. அப்படி முதலாவதாக அமேசான் ப்ரைம், பொன்மகள் வந்தாள், பெண்குயின், ஃப்ரெஞ்ச் பிரியாணி, குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி உள்ளிட்ட 7 படங்களை வாங்கியது.

அதன்படி, தமிழில் முதல் படமாக பொன்மகள் வந்தாள் படமும், இந்தியில் முதலாவதாக அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்த ‘குலாபோ சிதாபோ’ வெளியானது. மற்ற படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது  சகுந்தலா தேதி திரைபடத்தின் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது ஜூலை 31-ம் தேதி அமேசான் ப்ரைமில் ‘சகுந்தலா தேவி’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று தெரிகிறது.  வித்யா பாலன் நடித்துள்ள இந்தப்படத்தை அனுமேனன் இயக்கியிருக்கிறார். இது, தனது ஐந்தாவது வயதில், 18 வயது மாணவர்களுக்கான கணிதத்தைத் தீர்த்து வைத்த கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.