×

கத்ரீனா கைஃப்புடன் நடிக்கும் விஜய் சேதுபதி... பாலிவுட் படத்தின் முக்கிய அப்டேட்  

 

விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. முதல் பாலிவுட் படமான ‘மும்பைகர்’ படத்தை முடித்துள்ள அவர், அடுத்து தனது இரண்டாவது படத்தில் நடிக்கவுள்ளார். ‘அந்தாதுன்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது.  

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார். முழுக்க முழுக்க த்ரில்லர் ஜானரை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ள இப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. சில மாதங்கள் முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் கொரானா காரணமாக தொடங்கப்படாமல் இருந்தது. 

அதன்பிறகு கத்ரீனா கைப்பின் கால்ஷீட் இல்லை என கூறப்பட்டடது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தற்போது புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  90 நிமிடங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.