×

கத்ரினா கைஃப் உடன் விரைவில் ஜோடி சேர இருக்கும் விஜய் சேதுபதி!

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் சேதுபதி விரைவில் இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அப்படத்தின் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா இருவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விஜய் சேதுபதி கோலிவுட்டின் முன்னணி நடிகராக உருவெடுத்துவிட்டார். மற்ற தென்னிந்திய மொழிகளிலும் கால்தடம் பதித்து வருகிறார்.
 

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் சேதுபதி விரைவில் இணையவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அப்படத்தின் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா இருவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் சேதுபதி கோலிவுட்டின் முன்னணி நடிகராக உருவெடுத்துவிட்டார். மற்ற தென்னிந்திய மொழிகளிலும் கால்தடம் பதித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் தனது கால்தடம் பதிக்கத் துவங்கியுள்ளார்.

இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2021 இல் புனேவில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தாதுனைப் போலவே, இந்தப் படமும் ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சத்தா’ படத்திலும், சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மாநகரம் படத்தின் இந்தி ரிமேக்கிலும் நடிக்கவுள்ளார்.